×

திருக்கோஷ்டியூர் கோயில் மாசி தெப்ப திருவிழா அனுமன் வாகனத்தில் சுவாமி வீதி உலா

திருப்புத்தூர், மார்ச் 4:  திருப்புத்தூர் அருகே திருக்கோஷ்டியூர் ஸ்ரீசவுமிய நாராயணப்பெருமாள் கோயிலில் மாசி மக தெப்ப உற்சவ விழாவையொட்டி தங்க கவச அனுமான் வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது.  திருப்புத்தூர் அருகே திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப்பெருமாள் கோயிலில் மாசி மக தெப்ப உற்சவ விழா கடந்த மார்ச் 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 11 நாள் நடைபெறும் திருவிழாவில் மார்ச் 9ல் மாசி மக தெப்ப வைபவம் நடைபெற உள்ளது.

இவ்விழாவையொட்டி 3ம் நாளான நேற்று முன்தினம் புதிதாக செய்யப்பட்ட தங்கக்கவச அனுமான் வாகனத்தில் சுவாமி திருவீதி புறப்பாடு நடைபெற்றது. சன்னதி வீதி வழியாக புறப்பட்ட வீதி உலா நகரின் முக்கிய வீதிகள் வழியாக சன்னதியை அடைந்தது. தொடர்ந்து நாளை ஸ்ரீஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றுதல் வைபவம் நடைபெறும். 7ம் நாளான மார்ச் 6ம் தேதி மாலையில் சுவாமி சூர்ணாபிஷேகம், தங்கத் தோளுக்கினியானில் திருவீதி புறப்பாடு நடைபெறும். 8ம் நாளான மார்ச் 7ல் காலையில் சுவாமி திருவீதி புறப்பாடும், இரவு குதிரை வாகனத்தில் புறப்பாடும் நடைபெறும்.

9ம் திருநாளான மார்ச் 8ம் தேதி காலையில் வெண்ணைத்தாழி சேவையில் பெருமாள் திருவீதி புறப்பாடும், பின்னர் பகல் 10.10 மணிக்கு தெப்பம் முட்டுத்தள்ளுதலும், இரவு பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அன்னவாகனத்தில் திருவீதி புறப்பாடு நடைபெறும். 10ம் திருநாளான மார்ச் 9ல் காலை பெருமாள் தங்கத்தோளுக்கினியானில் திருவீதி புறப்பாடும், பகல் தெப்பம் சுற்றுதலும், இரவு 9.30 மணிக்கு பெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவியாருடன் மின்ஒளியால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி தெப்ப உற்சவம் நடைபெறும். 11ம் நாளான மார்ச் 10ம் தேதி தீர்த்தவாரி நடைபெறும். தொடர்ந்து பெருமாள் தங்கத்தோளுக்கினியானில் ஆஸ்தானத்திற்கு எழுந்தருளும், ஆசிர்வாதமும் நடைபெறும்.

Tags : Swamy Street ,Thirukkothiyoor Temple Masi Teppa Festival Hanuman ,
× RELATED மனைவியை கத்தியால் குத்தி கொன்று கணவர் தற்கொலை